• Jul 12 2026

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

shanu / Jul 11th 2026, 10:01 pm
image

இந்தியாவின் புகழ்பெற்ற  பின்னணி பாடகி எஸ்.ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 


பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது 88ஆவது வயதில் காலமானார். இவரது தென்னிந்திய திரைத்துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பின்னணி பாடகி ஜானகி சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.   


பிரபல இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்களின்  இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 


வெறுமனே தமிழ் மொழியில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார். 


இதுவரையில் நான்கு முறை தேசிய விருதுகளையும் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 


தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான இரசிகர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். 


அவரது இழப்பு தென்னிந்தியத் திரைத்துறையையும் ஒட்டுமொத்த இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சமீபத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, அவரைத் தொடர்ந்து திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் உள்ளிட்டோர் உயிரிழந்தமை திரைத்துறையினருக்கு  பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமான செய்தியும் ஒட்டுமொத்த திரைத்துறையை உலுக்கியுள்ளது. 


பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார் இந்தியாவின் புகழ்பெற்ற  பின்னணி பாடகி எஸ்.ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது 88ஆவது வயதில் காலமானார். இவரது தென்னிந்திய திரைத்துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணி பாடகி ஜானகி சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.   பிரபல இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்களின்  இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். வெறுமனே தமிழ் மொழியில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார். இதுவரையில் நான்கு முறை தேசிய விருதுகளையும் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான இரசிகர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அவரது இழப்பு தென்னிந்தியத் திரைத்துறையையும் ஒட்டுமொத்த இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, அவரைத் தொடர்ந்து திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் உள்ளிட்டோர் உயிரிழந்தமை திரைத்துறையினருக்கு  பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமான செய்தியும் ஒட்டுமொத்த திரைத்துறையை உலுக்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement