வடகிழக்கு பருவமழை காரணமாக மகாவலி கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச பாடசாலைகளைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக, கிண்ணியா உப்பாறு அல்-ஹிதாயா வித்யாலயத்தின் துப்புரவுப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.
துப்புரவுப் பணிகள் உப்பாறு கடற்படைப் பிரிவின் லெப்டினன் ஜெனரல் கே.ஏ.சி.எச். அபேரத்ன தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.
பாடசாலையின் அதிபர் ஐ.எம். ராபி நெறிப்படுத்தலின் கீழ், கடற்படையினர், பாடசாலை அதிபர் மற்றும் சமூகத்தினர் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்தனர்.
மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக, பாடசாலை வளாகம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டதுடன், சில இடங்களில் கூரைகளின் மீது மரங்கள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியிருந்தன.
கடற்படையினர் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சியின் பலனாக, பாடசாலை முற்றங்கள், வகுப்பறைகள் மற்றும் வளாகத்தின் பிற பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமைய, இயலுமான அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல் நடவடிக்கைகளில் தற்போது முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைத் தடைபடாதிருக்க, இத்தகைய துரித துப்புரவுப் பணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிண்ணியா பாடசாலைகள்: கடற்படையினர் துப்புரவுப் பணியில் தீவிரம் வடகிழக்கு பருவமழை காரணமாக மகாவலி கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச பாடசாலைகளைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு கட்டமாக, கிண்ணியா உப்பாறு அல்-ஹிதாயா வித்யாலயத்தின் துப்புரவுப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.துப்புரவுப் பணிகள் உப்பாறு கடற்படைப் பிரிவின் லெப்டினன் ஜெனரல் கே.ஏ.சி.எச். அபேரத்ன தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.பாடசாலையின் அதிபர் ஐ.எம். ராபி நெறிப்படுத்தலின் கீழ், கடற்படையினர், பாடசாலை அதிபர் மற்றும் சமூகத்தினர் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்தனர்.மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக, பாடசாலை வளாகம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டதுடன், சில இடங்களில் கூரைகளின் மீது மரங்கள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியிருந்தன.கடற்படையினர் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சியின் பலனாக, பாடசாலை முற்றங்கள், வகுப்பறைகள் மற்றும் வளாகத்தின் பிற பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தப்பட்டுள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைய, இயலுமான அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல் நடவடிக்கைகளில் தற்போது முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைத் தடைபடாதிருக்க, இத்தகைய துரித துப்புரவுப் பணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.