யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசிமருந்து நாகபூசணி அம்மன் கோயில் அறங்காவலர் சபையினரால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு இன்சுலின் ஊசிமருந்து வழங்கி உதவுமாறு யாழ் நீரிழிவுக் கழகத்தினால் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் அறங்காவலர் சபையினரிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாவே இவ்வாறு உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது நாகபூசனி அம்மன் கோயில் அறங்காவலர் சபை தலைவரினால் ஒரு லட்சம் பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசிமருந்து நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்திய நிபுனர் அரவிந்தனிடம் கையளிக்கப்பட்டது.
நீரிழிவு கழக தலைவர் தி. மைக்கல் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர்கள் , தாதியர்கள் கலந்து கொண்டனர்
யாழில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இன்சுலின் ஊசிமருந்து வழங்கிய நாகபூசணி அம்மன் கோயில் அறங்காவலர் சபை யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசிமருந்து நாகபூசணி அம்மன் கோயில் அறங்காவலர் சபையினரால் வழங்கப்பட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு இன்சுலின் ஊசிமருந்து வழங்கி உதவுமாறு யாழ் நீரிழிவுக் கழகத்தினால் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் அறங்காவலர் சபையினரிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாவே இவ்வாறு உதவி வழங்கப்பட்டுள்ளது.இதன் போது நாகபூசனி அம்மன் கோயில் அறங்காவலர் சபை தலைவரினால் ஒரு லட்சம் பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசிமருந்து நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்திய நிபுனர் அரவிந்தனிடம் கையளிக்கப்பட்டது.நீரிழிவு கழக தலைவர் தி. மைக்கல் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர்கள் , தாதியர்கள் கலந்து கொண்டனர்