• May 08 2025

இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமான சேவைகள் இரத்து

Chithra / May 8th 2025, 11:53 am
image

 

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதால், சைரன்கள் ஒலித்தன, 

மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர் என்று பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆப்ரேஷன் சிந்தூர் ‘ என்ற நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாகூரில் உள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தப் பகுதி லாகூரின் ஆடம்பரமான மத்திய வணிக மாவட்டம் மற்றும் லாகூர் இராணுவ கன்டோன்மென்ட்டை அண்மித்துள்ளது.

இதனால், சியால்கோட், கராச்சி மற்றும் லாகூர் விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமான சேவைகள் இரத்து  பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இதேவேளை, இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதால், சைரன்கள் ஒலித்தன, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர் என்று பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆப்ரேஷன் சிந்தூர் ‘ என்ற நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாகூரில் உள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.இந்தப் பகுதி லாகூரின் ஆடம்பரமான மத்திய வணிக மாவட்டம் மற்றும் லாகூர் இராணுவ கன்டோன்மென்ட்டை அண்மித்துள்ளது.இதனால், சியால்கோட், கராச்சி மற்றும் லாகூர் விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement