நாட்டின் பல பகுதிகளில் நாளை (30) முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும்.
13 மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பமான நிலை நிலவக்கூடும்.
இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சோர்வு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இதனுடன், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கங்கள் புதிதாக இல்லை என்றாலும், வெப்பம் தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளால் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த அபாயகரமான நிலையை முன்னிட்டு, மாநில சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
உச்சத்தில் வெப்பம்; 13 மாவட்டங்கள் ஆபத்தில் 109 பேர் உயிரிழந்த சோகம் நாட்டின் பல பகுதிகளில் நாளை (30) முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும்.13 மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பமான நிலை நிலவக்கூடும்.இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சோர்வு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளைஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதனுடன், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கங்கள் புதிதாக இல்லை என்றாலும், வெப்பம் தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளால் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த அபாயகரமான நிலையை முன்னிட்டு, மாநில சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.