2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் முழுமையான தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
"பரீட்சை வினாக்களுக்குச் சமமான வினாக்கள் வழங்கப்படும்" எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதும், அத்தகைய பொருட்களைத் தம்வசம் வைப்பதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருக்கும் 2,723 பரீட்சை நிலையங்களில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிமீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை 2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் முழுமையான தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. "பரீட்சை வினாக்களுக்குச் சமமான வினாக்கள் வழங்கப்படும்" எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதும், அத்தகைய பொருட்களைத் தம்வசம் வைப்பதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.இவ்விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருக்கும் 2,723 பரீட்சை நிலையங்களில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.