சிங்கப்பூரில் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதாரமற்ற முறையில் கையாண்ட மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதுடைய டிடியர் காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன் (Didier Gaspard Owen Maximilien) என்ற மாணவருக்கே நீதிமன்றம் இந்த அபாராதத்தை விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை குறித்த மாணவர் சுகாதாரமற்ற முறையில் கையாண்டதுடன், பின்னர் அதனை மீண்டும் இயந்திரத்திலேயே வைத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அவர் காணொளியாக பதிவு செய்த நிலையில், அது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவருக்கு எதிராக பொது இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் தனது தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் குற்றத்தை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படாமல் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பான இயந்திரம் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அதிலிருந்த 500 உறிஞ்சுகுழாய்களும் மாற்றப்பட்டுள்ளன.
மேக்சிமிலியனின் பெற்றோர் அந்த அபராதத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாகப் பொதியிடப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக ஊடகக் கவனத்திற்காக ஜுஸ் இயந்திர ஸ்ட்ரோவை நக்கிய இளைஞன் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு சிங்கப்பூரில் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதாரமற்ற முறையில் கையாண்ட மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதுடைய டிடியர் காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன் (Didier Gaspard Owen Maximilien) என்ற மாணவருக்கே நீதிமன்றம் இந்த அபாராதத்தை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை குறித்த மாணவர் சுகாதாரமற்ற முறையில் கையாண்டதுடன், பின்னர் அதனை மீண்டும் இயந்திரத்திலேயே வைத்துள்ளார்.இந்தச் சம்பவத்தை அவர் காணொளியாக பதிவு செய்த நிலையில், அது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவருக்கு எதிராக பொது இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டது.நீதிமன்றத்தில் தனது தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் குற்றத்தை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படாமல் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பான இயந்திரம் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அதிலிருந்த 500 உறிஞ்சுகுழாய்களும் மாற்றப்பட்டுள்ளன.மேக்சிமிலியனின் பெற்றோர் அந்த அபராதத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.மேலும், எதிர்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாகப் பொதியிடப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.