யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன.
குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன.
இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின், அனுமதியுடன் இன்று குறித்த வெடிபொருட்கள் அகற்றப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதிகளின் பல்வேறு இடங்களிலும், அண்மைக்காலத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவாலியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்; குவிந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன.குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன.இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின், அனுமதியுடன் இன்று குறித்த வெடிபொருட்கள் அகற்றப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதிகளின் பல்வேறு இடங்களிலும், அண்மைக்காலத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.