யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் யாழ். நகர பகுதி பாடசாலைகளுக்கு முன்பாக இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு மூதூர் -மணற்சேனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர் கோட்டக் கிளை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளில் தொடரும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் யாழ். நகர பகுதி பாடசாலைகளுக்கு முன்பாக இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு மூதூர் -மணற்சேனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.இதனை இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர் கோட்டக் கிளை ஏற்பாடு செய்திருந்தனர்.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.