• Mar 05 2026

இலங்கையில் உயிரிழந்த உடலத்துக்கு கூட பாதுகாப்பில்லை! இராதாகிருஸ்ணன் எம்.பி சபையில் கொந்தளிப்பு

Chithra / Mar 4th 2026, 12:12 pm
image


 

இலங்கையில் உயிரிழந்த யுவதியின் உடலத்துக்கு கூட பாதுகாப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போது கேள்வியை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்,


டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த யுவதி ஒருவரின் உடலத்தை துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று பதிவாகியிருந்தது.


மூவர் இதில் தொடர்புபட்டுள்ளனர். ஒரு உயிரிழந்த யுவதியின் உடலத்துக்கு கூட பாதுகாப்பின்மை காணப்படுகின்றது. 


இது தொடர்பில் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி சபையில் தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று அதற்குரிய பதிலை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் முன்னளிப்பதாக உத்தரவாதம் அளித்தார்.

இலங்கையில் உயிரிழந்த உடலத்துக்கு கூட பாதுகாப்பில்லை இராதாகிருஸ்ணன் எம்.பி சபையில் கொந்தளிப்பு  இலங்கையில் உயிரிழந்த யுவதியின் உடலத்துக்கு கூட பாதுகாப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போது கேள்வியை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்,டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த யுவதி ஒருவரின் உடலத்தை துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று பதிவாகியிருந்தது.மூவர் இதில் தொடர்புபட்டுள்ளனர். ஒரு உயிரிழந்த யுவதியின் உடலத்துக்கு கூட பாதுகாப்பின்மை காணப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி சபையில் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று அதற்குரிய பதிலை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் முன்னளிப்பதாக உத்தரவாதம் அளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement