• May 21 2025

யுத்தம் முடிந்தாலும் இலங்கை முழுமையாக சுதந்திரமடையவில்லை - ஜனாதிபதி தெரிவிப்பு

Chithra / May 20th 2025, 8:03 am
image


யுத்தத்தை நிறைவு  செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர், குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர்.அவர்களை நாம் தினமும் நினைவில் கொள்ள வேண்டும்.அவர்களுக்கு நாடு கடன் பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்தார்.

பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்தில்  நேற்று பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூறுகிறோம். இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். 

இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள,தமிழ்,முஸ்லிம்,பேர்கர், மலே, கிரிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர். யுத்தம் என்பது பாரிய அழிவாகும். 

யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள். யுத்தம் செய்த எவரும் யுத்தத்தை தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. 

பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின்  போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். 

நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும்.  

இந்த  நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது,   மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை  நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்”

எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததினருக்கு யுத்தம் செய்யாத,மோதல் அற்ற,கோபம்,சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும்.

சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும்.  இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை.

இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கிறோம். உலகில் சிறந்த நாடாக  மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். 

அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும்.படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்.



யுத்தம் முடிந்தாலும் இலங்கை முழுமையாக சுதந்திரமடையவில்லை - ஜனாதிபதி தெரிவிப்பு யுத்தத்தை நிறைவு  செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர், குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர்.அவர்களை நாம் தினமும் நினைவில் கொள்ள வேண்டும்.அவர்களுக்கு நாடு கடன் பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்தார்.பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்தில்  நேற்று பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூறுகிறோம். இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள,தமிழ்,முஸ்லிம்,பேர்கர், மலே, கிரிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர். யுத்தம் என்பது பாரிய அழிவாகும். யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள். யுத்தம் செய்த எவரும் யுத்தத்தை தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின்  போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும் உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும்.  இந்த  நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது,   மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை  நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்”எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததினருக்கு யுத்தம் செய்யாத,மோதல் அற்ற,கோபம்,சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும்.சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும்.  இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை.இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கிறோம். உலகில் சிறந்த நாடாக  மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும்.படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்.

Advertisement

Advertisement

Advertisement