• Aug 23 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்; வீட்டிலிருந்து வரும் உணவு

Chithra / Aug 23rd 2025, 4:09 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். 

இந்நிலையில்  சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்; வீட்டிலிருந்து வரும் உணவு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். இந்நிலையில்  சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement