• Apr 22 2026

ஈஸ்டர் தாக்குதல் நீதியை உறுதி செய் - மட்டக்களப்பில் கவனயீர்ப்பு!

shanu / Apr 21st 2026, 2:21 pm
image

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பு அரசடி கல்லடி பாலத்து  அருகில்  உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்கள் மதத் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


குண்டு தாக்குதலில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய், குற்றவாளியை பொறுப்புகூறுவதற்கு வழியேற்படுத்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புமிக்க வெளிப்படைத்தன்மையான விசாரணை வேண்டும் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான நினைவஞ்சலி இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


ஈஸ்டர் தாக்குதல் நீதியை உறுதி செய் - மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடி கல்லடி பாலத்து  அருகில்  உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்கள் மதத் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.குண்டு தாக்குதலில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய், குற்றவாளியை பொறுப்புகூறுவதற்கு வழியேற்படுத்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புமிக்க வெளிப்படைத்தன்மையான விசாரணை வேண்டும் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான நினைவஞ்சலி இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement