• Apr 19 2026

இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு - ஜனாதிபதி அதிரடி வர்த்தமானி

Chithra / Feb 1st 2026, 1:03 pm
image

 

டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

 

இதன்படி, கடந்த 28 ஆம் திகதி அமுலாகும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு, புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

 

பொது அவசரநிலை காரணமாக, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக, அவசரகால நிலையை நீடிப்பது பொருத்தமானது எனத் தாம் கருதுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


புதிய அவசரகால கட்டளைகளுக்கு இணங்க, இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பல கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பல புதிய கட்டளைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


அவசரகால நிலைப் பிரகடனத்துடன் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், குறித்த கட்டளைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கட்டளைகளின் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு - ஜனாதிபதி அதிரடி வர்த்தமானி  டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, கடந்த 28 ஆம் திகதி அமுலாகும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு, புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.  பொது அவசரநிலை காரணமாக, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக, அவசரகால நிலையை நீடிப்பது பொருத்தமானது எனத் தாம் கருதுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அவசரகால கட்டளைகளுக்கு இணங்க, இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பல கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பல புதிய கட்டளைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசரகால நிலைப் பிரகடனத்துடன் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், குறித்த கட்டளைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கட்டளைகளின் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement