• Apr 15 2026

வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட ரி20 உலகக் கிண்ணம்! பலத்த வரவேற்பு

Chithra / Feb 1st 2026, 12:57 pm
image

இம்முறை இடம்பெறும் ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது.


இன்று காலை 10.30 மணியளவில்  வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.


இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.


எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.


இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21ஆம் திகதி அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில்  யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட ரி20 உலகக் கிண்ணம் பலத்த வரவேற்பு இம்முறை இடம்பெறும் ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது.இன்று காலை 10.30 மணியளவில்  வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21ஆம் திகதி அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில்  யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement