மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையிலிருந்த 71வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியில் சென்று வீடு திரும்பிய நிலையில் அவரைக் காணாததால் தேடியுள்ளார்.
பின்னர் பெண் கிணற்றிற்குள் சடலமாக இருப்பதைக் கண்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையிலிருந்த 71வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓய்வுபெற்ற ஆசிரியரான குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியில் சென்று வீடு திரும்பிய நிலையில் அவரைக் காணாததால் தேடியுள்ளார். பின்னர் பெண் கிணற்றிற்குள் சடலமாக இருப்பதைக் கண்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.