• Jul 23 2025

பிரித்தானியாவில் ஈழத் தமிழர் அரசியல் மற்றும் கலாச்சார மாநாடு!

shanuja / Jul 22nd 2025, 10:27 am
image

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம்,  2026ஆம் ஆண்டு பெப்ரவி மாதத்தில் "ஈழத் தமிழர் அரசியல் - கலாச்சார மாநாடு" எனும் தலைப்பிலான மாநாட்டை  நடத்த திட்டமிட்டுள்ளது. 


இந்த மாநாடு, தமிழ் தேசியக் கொள்கையில் ஈடுபாடுள்ள புலம்பெயர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், கலை பண்பாட்டு குழுக்கள், மற்றும் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு தளத்திற்கு அழைத்து வருவதாகும்.


மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல், பண்பாட்டு அடையாளங்களின் பாதுகாப்பு, பொதுத் தொனிப்பொலியுடன் தீர்வு தேடல், 

அமைப்புக் கோட்பாடு உள்ளிட்டன அடங்குகின்றன. 


இம்மாநாட்டின் ஏற்பாடுகளை பிரித்தானியாவில் இயங்கும் தமிழரசு கட்சியின் ஃபோரம் முன்னெடுத்துள்ளது. ஆனால், சமீபமாக, மூடிய அறையில் தமிழரசுக் கட்சி ஆதரவு குழு என சில குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமூகத்தின் நலனுக்காக செயல்படும் அனைவரையும் இணைத்து, பொது முயற்சியுடன் தமிழ் தேசிய கட்டமைப்பை பாதுகாப்பதற்கே தமிழரசு கட்சி பிரித்தானிய ஃபோரம் நிச்சயமாக அர்ப்பணிப்புடன் செயற்படும்.


இம்மாநாடு, ஒரு நிகழ்வாக மட்டுமல்ல - அது புதிய தமிழ் அரசியல் எழுச்சிக்கான துருவ நட்சத்திரமாக அமையும். உங்கள் பங்களிப்பும், உங்கள் சிந்தனைகளும், உங்கள் செயற்பாடுகளும் அதற்குத் தேவையானவை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஃபோரம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஈழத் தமிழர் அரசியல் மற்றும் கலாச்சார மாநாடு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம்,  2026ஆம் ஆண்டு பெப்ரவி மாதத்தில் "ஈழத் தமிழர் அரசியல் - கலாச்சார மாநாடு" எனும் தலைப்பிலான மாநாட்டை  நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழ் தேசியக் கொள்கையில் ஈடுபாடுள்ள புலம்பெயர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், கலை பண்பாட்டு குழுக்கள், மற்றும் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு தளத்திற்கு அழைத்து வருவதாகும்.மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல், பண்பாட்டு அடையாளங்களின் பாதுகாப்பு, பொதுத் தொனிப்பொலியுடன் தீர்வு தேடல், அமைப்புக் கோட்பாடு உள்ளிட்டன அடங்குகின்றன. இம்மாநாட்டின் ஏற்பாடுகளை பிரித்தானியாவில் இயங்கும் தமிழரசு கட்சியின் ஃபோரம் முன்னெடுத்துள்ளது. ஆனால், சமீபமாக, மூடிய அறையில் தமிழரசுக் கட்சி ஆதரவு குழு என சில குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.சமூகத்தின் நலனுக்காக செயல்படும் அனைவரையும் இணைத்து, பொது முயற்சியுடன் தமிழ் தேசிய கட்டமைப்பை பாதுகாப்பதற்கே தமிழரசு கட்சி பிரித்தானிய ஃபோரம் நிச்சயமாக அர்ப்பணிப்புடன் செயற்படும்.இம்மாநாடு, ஒரு நிகழ்வாக மட்டுமல்ல - அது புதிய தமிழ் அரசியல் எழுச்சிக்கான துருவ நட்சத்திரமாக அமையும். உங்கள் பங்களிப்பும், உங்கள் சிந்தனைகளும், உங்கள் செயற்பாடுகளும் அதற்குத் தேவையானவை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஃபோரம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement