திருகோணமலை மாவட்ட திறன் விருத்தி பகல் நேரப் பராமரிப்பு நிலையம் கிண்ணியா நடுவூற்று பகுதியில் இன்று (17)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.
குறித்த கட்டிடத்தை கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இதில் பிரதியமைச்சர் களான வசந்த பியதிஸ்ஸ, அருண் கேமசந்திரா, அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி உட்பட, பிரதேச செயலாளர்கள்,கிண்ணியா நகர பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிலையத்துக்கான புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக நீதியை உறுப்படுத்தும் வகையில் தடைகளற்ற சமூக வாழ்க்கை அரச கொள்கையை யதார்த்தமாக்குதல் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இக் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
ஆறு மாதம் தொடக்கம் 18 வயது வரையான மாற்றுத் திறனாளிகள் இங்கு தங்களது பெற்றார்களுடன் வருகை தந்து திறன் விருத்தியை மேம்படுத்த முடியும்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் உப்பாலி பன்னிலகே,
இந்த நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கு திறனை வளர்க்க இந்த நிலையம் பெரிதும் உதவும். இதையே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். சமூகத்தில் இனமதபேதமற்ற சிறந்த சமூகத்தை உருவாக்கவே. சமூகத்துக்கு உணர்வு பூர்வமாக சேவையாற்ற வேண்டும். இது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களின் கடமையுமாகும் எனத் தெரிவித்தார்.
கிண்ணியாவில் மாவட்ட திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு திருகோணமலை மாவட்ட திறன் விருத்தி பகல் நேரப் பராமரிப்பு நிலையம் கிண்ணியா நடுவூற்று பகுதியில் இன்று (17)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.குறித்த கட்டிடத்தை கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.இதில் பிரதியமைச்சர் களான வசந்த பியதிஸ்ஸ, அருண் கேமசந்திரா, அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி உட்பட, பிரதேச செயலாளர்கள்,கிண்ணியா நகர பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிலையத்துக்கான புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.சமூக நீதியை உறுப்படுத்தும் வகையில் தடைகளற்ற சமூக வாழ்க்கை அரச கொள்கையை யதார்த்தமாக்குதல் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இக் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆறு மாதம் தொடக்கம் 18 வயது வரையான மாற்றுத் திறனாளிகள் இங்கு தங்களது பெற்றார்களுடன் வருகை தந்து திறன் விருத்தியை மேம்படுத்த முடியும். இதன்போது உரையாற்றிய அமைச்சர் உப்பாலி பன்னிலகே, இந்த நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கு திறனை வளர்க்க இந்த நிலையம் பெரிதும் உதவும். இதையே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். சமூகத்தில் இனமதபேதமற்ற சிறந்த சமூகத்தை உருவாக்கவே. சமூகத்துக்கு உணர்வு பூர்வமாக சேவையாற்ற வேண்டும். இது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களின் கடமையுமாகும் எனத் தெரிவித்தார்.