• Jun 28 2026

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

shanu / Jun 27th 2026, 6:23 pm
image

அம்பாறை -  கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்   மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை முன்பாக  இன்று பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானதுடன் பொதுமக்களும் பொலிஸாருடன் இணைந்து கொண்டனர்.


அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் , அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண  நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.


பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரனுடன் பொலிஸ் நிலைய  முக்கிய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் பொதுமக்களுக்கு போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இப்பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் அம்பாறை -  கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்   மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை முன்பாக  இன்று பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதன் போது முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானதுடன் பொதுமக்களும் பொலிஸாருடன் இணைந்து கொண்டனர்.அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் , அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண  நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரனுடன் பொலிஸ் நிலைய  முக்கிய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் பொதுமக்களுக்கு போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இப்பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement