• May 22 2025

மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: ஒருவர் கைது..!

Sharmi / May 22nd 2025, 1:00 pm
image

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை  எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, ஹிகுருகமுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பதுளை-மஹியங்கனை வீதியில் 10,510 மில்லிகிராம் ஹெரோயின் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி, நேற்றையதினம்(21) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது என பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பதுளையில் பிரபல தமிழ் பாடசாலை  மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த ஹெராயினை எடுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மூன்று சிறிய பொட்டலங்களில் பொதி செய்யப்பட்டிருந்த ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: ஒருவர் கைது. பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை  எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, ஹிகுருகமுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.பதுளை-மஹியங்கனை வீதியில் 10,510 மில்லிகிராம் ஹெரோயின் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி, நேற்றையதினம்(21) கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது என பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பணியகம் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பதுளையில் பிரபல தமிழ் பாடசாலை  மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த ஹெராயினை எடுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மூன்று சிறிய பொட்டலங்களில் பொதி செய்யப்பட்டிருந்த ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement