• May 21 2025

வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணி நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்..!

Sharmi / May 20th 2025, 6:00 pm
image

வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணி நிர்ணயம் தொடர்பாக நடாத்தப்படுகின்ற கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானது பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் விடுக்கப்பட்டுள்ளது.

அதில், காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் 2025.03.28 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிணக்குகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 2025 மே மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 1.00 மணி வரையில் பாராளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெற உள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணி நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல். வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணி நிர்ணயம் தொடர்பாக நடாத்தப்படுகின்ற கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த அழைப்பானது பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் விடுக்கப்பட்டுள்ளது.அதில், காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் 2025.03.28 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிணக்குகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 2025 மே மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 1.00 மணி வரையில் பாராளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெற உள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement