கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் புதன்கிழமை, அவரது தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
தேசபந்து தென்னகோன் கடந்த திங்கட்கிழமை தமது சட்டத்தரணி டி.வீரவிக்ரமவுடன் குறித்த குழுவின் முன் முன்னிலையானபோது அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தேசபந்து தென்னகோன் அந்த குழுவிடம் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அதற்கான அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.
பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் அந்த குழு விளக்கமளித்தது.
அதன்போது, சத்தியப்பிரமாணப் பத்திரங்கள் வடிவில் சாட்சியங்களை வழங்க அவர் ஒப்புக்கொண்டார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் முன்னிலையில் முதல் முறையாகக் கடந்த திங்கட்கிழமை தேசபந்து தென்னகோன் முன்னிலையானார்.
இதன்போது அவர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையையும் குறித்த குழு நிராகரித்தது.
இந்தநிலையில், தேசபந்து தென்னகோன் தமக்கு எதிரான குற்றப்பத்திரிக்கைக்கு விளக்கமளித்தவுடன் விசாரணை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவிற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமை தாங்குகிறார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தயாராகும் தேசபந்து தென்னகோன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் புதன்கிழமை, அவரது தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகவுள்ளார். தேசபந்து தென்னகோன் கடந்த திங்கட்கிழமை தமது சட்டத்தரணி டி.வீரவிக்ரமவுடன் குறித்த குழுவின் முன் முன்னிலையானபோது அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தேசபந்து தென்னகோன் அந்த குழுவிடம் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அதற்கான அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது. பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் அந்த குழு விளக்கமளித்தது. அதன்போது, சத்தியப்பிரமாணப் பத்திரங்கள் வடிவில் சாட்சியங்களை வழங்க அவர் ஒப்புக்கொண்டார். தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் முன்னிலையில் முதல் முறையாகக் கடந்த திங்கட்கிழமை தேசபந்து தென்னகோன் முன்னிலையானார். இதன்போது அவர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையையும் குறித்த குழு நிராகரித்தது. இந்தநிலையில், தேசபந்து தென்னகோன் தமக்கு எதிரான குற்றப்பத்திரிக்கைக்கு விளக்கமளித்தவுடன் விசாரணை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவிற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமை தாங்குகிறார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.