• Nov 22 2025

அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை! மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்

Chithra / Nov 21st 2025, 5:09 pm
image

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை  நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. 

தொல்பொருள் எனும் போர்வையில் நேற்றைய தினம் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும்  இவ்வாறு பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்ட நிலையில் இன்று வெல்லாவெளியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பெயர்ப்பலகையை நாட்ட விடாமல் தடுத்துள்ளனர். 

இந்நிலையில் படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் நேற்று தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டன.

தமிழர்களின் பூர்வீக நிலத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்புக்கள் இடப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை மட்டக்களப்பில் தொடரும் குழப்பம் மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை  நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில் நேற்றைய தினம் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும்  இவ்வாறு பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்ட நிலையில் இன்று வெல்லாவெளியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பெயர்ப்பலகையை நாட்ட விடாமல் தடுத்துள்ளனர். இந்நிலையில் படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் நேற்று தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டன.தமிழர்களின் பூர்வீக நிலத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்புக்கள் இடப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement