• Nov 22 2025

இன்றிரவு வரை காத்திருக்கும் ஆபத்து; இலங்கை மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

Chithra / Nov 22nd 2025, 1:43 pm
image


நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கங்களுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (22) பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இன்றிரவு வரை காத்திருக்கும் ஆபத்து; இலங்கை மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கங்களுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று (22) பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement