• Mar 13 2026

கயிருடன் காணப்பட்ட தயிர் வடைகள்; சாய்ந்தமருதுவில் அதிரடி சோதனை

Chithra / Jan 7th 2026, 8:00 am
image



சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகத்தில் கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் நேற்று சோதனை செய்யப்பட்டுள்ளன.


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்கேற்புடன் வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.


இதன்போது அங்கு காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டதுடன்,  எதிர்காலத்தில் அடிக்கடி பரிசோதனைகள் நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.


இதேவேளை உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், அதன் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்கின்மையுடன் காணப்பட்டதுடன், அதனை சரி செய்வதற்காக ஒரு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது.


மேலும் இதில் நுகர்வுக்கு பொருத்தமற்ற கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.


கயிருடன் காணப்பட்ட தயிர் வடைகள்; சாய்ந்தமருதுவில் அதிரடி சோதனை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகத்தில் கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் நேற்று சோதனை செய்யப்பட்டுள்ளன.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்கேற்புடன் வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.இதன்போது அங்கு காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டதுடன்,  எதிர்காலத்தில் அடிக்கடி பரிசோதனைகள் நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், அதன் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்கின்மையுடன் காணப்பட்டதுடன், அதனை சரி செய்வதற்காக ஒரு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது.மேலும் இதில் நுகர்வுக்கு பொருத்தமற்ற கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement