• Aug 26 2025

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; உயிர்தப்பிய தம்பதியினர்

Aathira / Aug 25th 2025, 7:35 am
image

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்றைய தினம் (25) அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த துப்பாக்கிச் சூடு விடுதி ஒன்றில் தங்கி இருந்த  தம்பதியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

துப்பாக்கிச்சூட்டை நடத்திய மூன்று சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

தற்போது அவர்களை  தேடி பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; உயிர்தப்பிய தம்பதியினர் வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்றைய தினம் (25) அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு விடுதி ஒன்றில் தங்கி இருந்த  தம்பதியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூட்டை நடத்திய மூன்று சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தற்போது அவர்களை  தேடி பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement