போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாத்தளை - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் உள்ள மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தளை - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 567 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி 3 கோடி ரூபா பெறுமதியான வீடொன்றை கட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் சொத்துக்களை முடக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் விற்று ஆடம்பரமாக வீடு கட்டிய தம்பதியினர் கைது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாத்தளை - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் உள்ள மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தளை - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் ஆவர்.சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 567 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி 3 கோடி ரூபா பெறுமதியான வீடொன்றை கட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் சொத்துக்களை முடக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.