• Nov 04 2024

கனடாவில் அமுலுக்கு வந்த விதிகளால் நிறுவனங்கள் அவதி

Anaath / Sep 29th 2024, 3:14 pm
image

Advertisement

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் துரூடோ,  கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த  நிலையில் கடந்த 26 ஆம் திகதி  புதிய புலம்பெயர்தல் விதிகள் சில அமுலுக்கு வந்துள்ல நிலையில் 

குறித்த புதிய விதிகளால் பல நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் எங்கெங்கு வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என  தெரிவித்துள்ளார்.

அத்துடன் பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

மேலும் கனேடிய பணி வழங்குவோர் வேலைக்கு எடுக்க அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந்த புலம் பெயர் விதிகளால் , பல உணவங்கள், புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டியுள்ளதாக அந்த உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடா அரசின் இந்த விதி முறைகளால் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாக இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்கவும் முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் அமுலுக்கு வந்த விதிகளால் நிறுவனங்கள் அவதி கனடாவின் பிரதமர் ஜஸ்டின் துரூடோ,  கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த  நிலையில் கடந்த 26 ஆம் திகதி  புதிய புலம்பெயர்தல் விதிகள் சில அமுலுக்கு வந்துள்ல நிலையில் குறித்த புதிய விதிகளால் பல நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் எங்கெங்கு வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என  தெரிவித்துள்ளார்.அத்துடன் பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் கனேடிய பணி வழங்குவோர் வேலைக்கு எடுக்க அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இதேவேளை இந்த புலம் பெயர் விதிகளால் , பல உணவங்கள், புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டியுள்ளதாக அந்த உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கனடா அரசின் இந்த விதி முறைகளால் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாக இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்கவும் முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement