தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சித்திரை முழுநிலா நாளில் இன்று நினைவுகூரப்படுகின்றார்.
அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள் தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சித்திரை முழுநிலா நாளில் இன்று நினைவுகூரப்படுகின்றார்.அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது.வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.