• May 17 2025

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கிலும் பல சிறைக் கைதிகளுக்கு விடுதலை

Chithra / May 12th 2025, 11:15 am
image


வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில்   யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர். 

கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

 


இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இன்று இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யு.எச். மதுசங்க தலைமையில் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றிருந்தது.

 


வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கிலும் பல சிறைக் கைதிகளுக்கு விடுதலை வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர்.அந்தவகையில்   யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர். கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இன்று இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யு.எச். மதுசங்க தலைமையில் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றிருந்தது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now