• Apr 17 2026

நிலக்கரி இறக்குமதி விவகாரம் - எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

Chithra / Apr 17th 2026, 3:03 pm
image

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.


நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும் நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம் பதவி விலகியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த விடயத்தை அறிவித்து, எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.


சமீபத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது தனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தூய்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்தத் திட்டத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


நிலக்கரி இறக்குமதி விவகாரம் - எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும் நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம் பதவி விலகியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த விடயத்தை அறிவித்து, எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.சமீபத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது தனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தூய்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்தத் திட்டத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement