• Aug 12 2025

கடலிற்குள் மோதிய சீனக் கப்பல்கள்; பிலிப்பைன்ஸ் படகை துரத்தியதால் விபரீதம்!

shanuja / Aug 12th 2025, 9:29 am
image

சீனாவிற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கடலிற்குள் ஒன்றுடன்  ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 


தென் சீனக் கடலில் ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.  


சீனாவின்  பி.எல்.ஏ -கடற்படை போர்க்கப்பல் மற்றும் சீன கடலோர காவல்படை கப்பல்   ஆகியவையே கடலிற்குள்  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.


பிலிப்பைன்ஸ் நாட்டின்  ரோந்து  படகைத் துரத்தும்போது குறித்த இரு  கப்பல்களும்  மோதி விபத்துக்குள்ளாகின.


பிலிப்பைன்ஸ் கப்பலைத் துரத்த முற்பட்டு விபத்திற்குள்ளானதில் சீனாவின் கடலோர காவல்படை கப்பல் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளது. 


விபத்தில் ஏற்பட்ட பலத்த சேதத்தால் சீனாவிற்கு கோடிக்கணக்கான ரூபா இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


சீனாவின் இரண்டு கப்பல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சியை  வீடியோவாகப் பதிவு செய்து  பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.

கடலிற்குள் மோதிய சீனக் கப்பல்கள்; பிலிப்பைன்ஸ் படகை துரத்தியதால் விபரீதம் சீனாவிற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கடலிற்குள் ஒன்றுடன்  ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. தென் சீனக் கடலில் ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.  சீனாவின்  பி.எல்.ஏ -கடற்படை போர்க்கப்பல் மற்றும் சீன கடலோர காவல்படை கப்பல்   ஆகியவையே கடலிற்குள்  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.பிலிப்பைன்ஸ் நாட்டின்  ரோந்து  படகைத் துரத்தும்போது குறித்த இரு  கப்பல்களும்  மோதி விபத்துக்குள்ளாகின.பிலிப்பைன்ஸ் கப்பலைத் துரத்த முற்பட்டு விபத்திற்குள்ளானதில் சீனாவின் கடலோர காவல்படை கப்பல் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளது. விபத்தில் ஏற்பட்ட பலத்த சேதத்தால் சீனாவிற்கு கோடிக்கணக்கான ரூபா இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சீனாவின் இரண்டு கப்பல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சியை  வீடியோவாகப் பதிவு செய்து  பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement