நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ, வடமேல், ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், மேலும் காலி, மாத்தறை, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீரென பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.
எனவே, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. இன்றைய வானிலை நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, வடமேல், ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், மேலும் காலி, மாத்தறை, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் உள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீரென பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.