வெள்ளப்பெருக்கில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் நால்வர் அடங்கிய ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
கனமழையால் நதிகளும் தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. அத்துடன் சாலைகளையும் வெள்ளம் மூழ்கியதால் போக்குவரத்தும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை காரொன்று கடக்க முயன்றது.
எனினும் வெள்ளம் பெருக்கெடுக்க வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. காரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகள்கள் என நான்கு பேர் பயணித்தனர்.
வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் காரில் பயணித்த குடும்பத்தினர் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா(40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4) எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தினருடன் பஸ்தாருக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டு அவர்களிள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாக்கு மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; நால்வரடங்கிய குடும்பமே பலி - சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் வெள்ளப்பெருக்கில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் நால்வர் அடங்கிய ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் நதிகளும் தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. அத்துடன் சாலைகளையும் வெள்ளம் மூழ்கியதால் போக்குவரத்தும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை காரொன்று கடக்க முயன்றது. எனினும் வெள்ளம் பெருக்கெடுக்க வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. காரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகள்கள் என நான்கு பேர் பயணித்தனர். வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் காரில் பயணித்த குடும்பத்தினர் நால்வரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா(40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4) எனத் தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தினருடன் பஸ்தாருக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டு அவர்களிள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாக்கு மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.