• Mar 13 2026

பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்த கார்; மூவர் காயம்!

Chithra / Dec 29th 2025, 12:38 pm
image

 அம்பாறை - பக்கிஎல்ல, ரஜகலதென்ன பிரதேசத்தில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்து நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் கொனகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்த கார்; மூவர் காயம்  அம்பாறை - பக்கிஎல்ல, ரஜகலதென்ன பிரதேசத்தில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் கொனகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement