• Apr 20 2026

வாத்துவையில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து

dorin / Mar 21st 2026, 7:14 pm
image

வாத்துவ பகுதியில் உள்ள புகையிரத கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர்.

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


வாத்துவையில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து வாத்துவ பகுதியில் உள்ள புகையிரத கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர்.மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து இடம்பெற்ற போது காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.காயமடைந்த இருவரும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement