• May 11 2025

துவிச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான கார்: சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை..!

Sharmi / May 10th 2025, 7:39 pm
image

மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் பலவான் குடி பக்கம் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியில் வைத்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்ததுடன் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சிறுவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தில் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது. 

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.



துவிச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான கார்: சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை. மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் பலவான் குடி பக்கம் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியில் வைத்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்ததுடன் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் சிறுவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவ்விபத்தில் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement