ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இன்று பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்றது.
இதன்படி தவிசாளர் தெரிவில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்துல் மனாப் ரிஸான் போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபையை கைப்பற்றியதுடன் 07 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பினை கோரி சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த வகார்தீன் முகம்மது இம்ஜாத் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
குச்சவெளிப் பிரதேச சபையை கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இன்று பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்றது.இதன்படி தவிசாளர் தெரிவில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்துல் மனாப் ரிஸான் போட்டியிட்டனர். இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபையை கைப்பற்றியதுடன் 07 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பினை கோரி சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.இதையடுத்து உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த வகார்தீன் முகம்மது இம்ஜாத் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.