• Apr 28 2026

சிவனடி பாத மலையிலிந்து வீடு திரும்பிய கார் விபத்து!

Ziya / Feb 23rd 2026, 5:47 pm
image

சிவனடி பாத மலைக்கு வந்து மீண்டும் வீடு திரும்பிய கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


இச் சம்பவம் இன்று மதியம் 3.30 நோட்டன் லக்சபான பகுதியில் இடம் பெற்றது என நோட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பொலிசார் மேலும் கூறுகையில் ,


சிவனடி பாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும்  காலி பகுதியில் தங்களது வீட்டிற்கு திரும்பிய வேலையில் நோட்டன் லக்சபான பகுதியில் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் காரில் சென்ற நான்கு பேரில் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்சபான கிராமிய வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


முதற் கட்ட விசாரணையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.


விபத்து குறித்து நோட்டன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

சிவனடி பாத மலையிலிந்து வீடு திரும்பிய கார் விபத்து சிவனடி பாத மலைக்கு வந்து மீண்டும் வீடு திரும்பிய கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் இன்று மதியம் 3.30 நோட்டன் லக்சபான பகுதியில் இடம் பெற்றது என நோட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.பொலிசார் மேலும் கூறுகையில் ,சிவனடி பாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும்  காலி பகுதியில் தங்களது வீட்டிற்கு திரும்பிய வேலையில் நோட்டன் லக்சபான பகுதியில் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் காரில் சென்ற நான்கு பேரில் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்சபான கிராமிய வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.முதற் கட்ட விசாரணையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.விபத்து குறித்து நோட்டன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement