• May 21 2026

புஸ்ஸலாவ விபத்து - ஒருவர் பலி!

Ziya / May 20th 2026, 3:28 pm
image

கொத்மலை தவலந்தென்னையிலிருந்து கம்பளை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதில், வீதியை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவையில் பதிவாகியுள்ளது.


இந்த விபத்து கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் புஸ்ஸல்லாவ நகர மத்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


72 வயதுடைய நபர் ஒருவர் கவனக்குறைவாக வீதியை கடக்க முயன்றபோது, நகரம் வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளார். பின்னர் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புஸ்ஸலாவ விபத்து - ஒருவர் பலி கொத்மலை தவலந்தென்னையிலிருந்து கம்பளை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதில், வீதியை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவையில் பதிவாகியுள்ளது.இந்த விபத்து கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் புஸ்ஸல்லாவ நகர மத்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.72 வயதுடைய நபர் ஒருவர் கவனக்குறைவாக வீதியை கடக்க முயன்றபோது, நகரம் வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளார். பின்னர் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement