• Sep 19 2026

கலுகல கல்லூரியில் புதிய இருமாடி வகுப்பறைக் கட்டிடம் திறப்பு

Aathira / Sep 19th 2026, 11:16 am
image

மத்திய மாகாணத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கலுகல மகா வித்தியாலயத்தில், 38 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (18) கலுகல மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷா சுரங்கா மற்றும் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவிராராச்சி ஆகியோரின் முன்னிலையில் இந்தக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் பிரதம செயலாளர் மதுபானி பியசேன, மாகாண கல்விப் பணிப்பாளர் நவோமி ஹெட்டியாராச்சி, சிரேஷ்ட உதவி செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி, ஹட்டன் கல்விப் பிரிவு பணிப்பாளர் எஸ். ஜெயகுமார் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன், அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் கபில நாகந்தல, கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர் எஸ். உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான மேலதிக இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலுகல கல்லூரியில் புதிய இருமாடி வகுப்பறைக் கட்டிடம் திறப்பு மத்திய மாகாணத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கலுகல மகா வித்தியாலயத்தில், 38 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (18) கலுகல மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷா சுரங்கா மற்றும் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவிராராச்சி ஆகியோரின் முன்னிலையில் இந்தக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் பிரதம செயலாளர் மதுபானி பியசேன, மாகாண கல்விப் பணிப்பாளர் நவோமி ஹெட்டியாராச்சி, சிரேஷ்ட உதவி செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி, ஹட்டன் கல்விப் பிரிவு பணிப்பாளர் எஸ். ஜெயகுமார் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.அத்துடன், அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் கபில நாகந்தல, கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர் எஸ். உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான மேலதிக இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement