• Sep 20 2026

முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பகுதிகளில் பலத்த இடி மின்னல் எச்சரிக்கை

Chithra / Sep 20th 2026, 11:48 am
image


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, இடி மின்னலினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பகுதிகளில் பலத்த இடி மின்னல் எச்சரிக்கை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இடி மின்னலினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement