சுவிட்சர்லாந்து, பிரிபொங் மாகாணம், கெர்சர் நகரில் நேற்று (10) மாலை பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வீதியில் 11 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தீப்பிடித்த உடனேயே பேருந்து முழுவதிலும் தீ வேகமாகப் பரவியதால் பயணிகளால் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேருந்தில் இருந்த 11 பயணிகளில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பின்னர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தில் திடீரென தீப்பற்றியதன் பின்னணியைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணித்த வேளையில் தீப்பிடித்த பேருந்து ; 6 பயணிகள் உயிரிழப்பு - ஐவர் படுகாயம் சுவிட்சர்லாந்து, பிரிபொங் மாகாணம், கெர்சர் நகரில் நேற்று (10) மாலை பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீதியில் 11 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பிடித்த உடனேயே பேருந்து முழுவதிலும் தீ வேகமாகப் பரவியதால் பயணிகளால் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த 11 பயணிகளில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.பேருந்தில் திடீரென தீப்பற்றியதன் பின்னணியைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.