• Oct 11 2024

மனைவியின் கழுத்தை அறுத்து கொடூர கொலை; தப்பியோடிய கணவன் - குருநாகலில் பயங்கரம்

Chithra / Jul 18th 2024, 12:16 pm
image

Advertisement


குருணாகலில் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகமுவ பகுதியில் கணவர் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரால் கழுத்து வெட்டப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (17) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கடிகமுவ பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபரான கணவர் மது போதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், மனைவி குளிப்பதற்காக தனது பெற்றோரின் வீட்டிலிருந்து கிணற்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது சந்தேக நபரான கணவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் கழுத்தை அறுத்து கொடூர கொலை; தப்பியோடிய கணவன் - குருநாகலில் பயங்கரம் குருணாகலில் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகமுவ பகுதியில் கணவர் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரால் கழுத்து வெட்டப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய  பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (17) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.கடிகமுவ பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,சந்தேக நபரான கணவர் மது போதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.பின்னர், மனைவி குளிப்பதற்காக தனது பெற்றோரின் வீட்டிலிருந்து கிணற்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது சந்தேக நபரான கணவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement