• Aug 04 2025

சிலியில் இடிந்து வீழ்ந்த உலகின் பெரிய சுரங்கம் இருவர் உயிரிழப்பு - ஐவர் மாயம் மீட்புப் பணிகள் தீவிரம்

shanuja / Aug 4th 2025, 9:54 am
image

உலகின் மிகப்பெரிய சுரங்கமாகக் கருதப்படும் சிலியில் உள்ள எல் டெனியென்ட் என்ற செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


உலகின் மிகப்பெரிய சுரங்கமான டெனியென்ட் செப்புச் சுரங்கம் தென் அமெரிக்காவின் மேற்கே சிலி நாட்டில் உள்ளது. 


சிலி நாட்டைத் தாக்கிய 4.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக செப்புச் சுரங்கம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 


சுரங்கம் இடிந்து விழுந்தபோது தொழிலாளர்கள் 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


சுரங்கம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த தொழிலாளர்களில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை சுரங்கத்தில் சிக்கிய 5 தொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் உயிரிழந்த  இரண்டு தொழிலாளர்களின்  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணியில் 100 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது அந்நாட்டு மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிலியில் இடிந்து வீழ்ந்த உலகின் பெரிய சுரங்கம் இருவர் உயிரிழப்பு - ஐவர் மாயம் மீட்புப் பணிகள் தீவிரம் உலகின் மிகப்பெரிய சுரங்கமாகக் கருதப்படும் சிலியில் உள்ள எல் டெனியென்ட் என்ற செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய சுரங்கமான டெனியென்ட் செப்புச் சுரங்கம் தென் அமெரிக்காவின் மேற்கே சிலி நாட்டில் உள்ளது. சிலி நாட்டைத் தாக்கிய 4.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக செப்புச் சுரங்கம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கம் இடிந்து விழுந்தபோது தொழிலாளர்கள் 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த தொழிலாளர்களில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை சுரங்கத்தில் சிக்கிய 5 தொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் உயிரிழந்த  இரண்டு தொழிலாளர்களின்  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணியில் 100 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது அந்நாட்டு மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement