• May 23 2026

டாக்கா தேவாலயத்தில் நேற்று குண்டுவெடிப்பு ;இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

shanu / Dec 26th 2025, 11:07 am
image

பங்களாதேஷ்  டாக்கா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று குண்டுவெடிப்பு இடம்பெற்றதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 


டாக்காவின் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே வீதியில் ஏராளமானவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கூடியிருந்தனர். 


இந்த நிலையில் மர்மநபர்கள் அங்கு நாட்டு வெடிகுண்டு ஒன்றை மக்கள் கூட்டத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பியோடினர். 


பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குண்டுவெடிப்பில் சிக்கி இளைஞர் ஒருவர்  உடல் சிதறி உயிரிழந்தார்.


படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையிவ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த சம்பவங்களால் பங்களாதேஷில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


இதற்கிடையே ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது.


இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட போது உள்ளூர் மக்கள் பிடித்து தாக்கியதில் பலியானதாக சொல்லப்படும் நிலையில் இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

டாக்கா தேவாலயத்தில் நேற்று குண்டுவெடிப்பு ;இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு பங்களாதேஷ்  டாக்கா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று குண்டுவெடிப்பு இடம்பெற்றதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். டாக்காவின் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே வீதியில் ஏராளமானவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கூடியிருந்தனர். இந்த நிலையில் மர்மநபர்கள் அங்கு நாட்டு வெடிகுண்டு ஒன்றை மக்கள் கூட்டத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பியோடினர். பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குண்டுவெடிப்பில் சிக்கி இளைஞர் ஒருவர்  உடல் சிதறி உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையிவ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த சம்பவங்களால் பங்களாதேஷில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.இதற்கிடையே ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது.இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட போது உள்ளூர் மக்கள் பிடித்து தாக்கியதில் பலியானதாக சொல்லப்படும் நிலையில் இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement