• Dec 11 2024

முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன் பொறிக்கப்பட்ட சின்னங்களை அகற்றிய பெலிஸார்!

Chithra / Nov 14th 2024, 8:17 am
image

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக காணப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் பொலிஸாரால் இன்று அகற்றப்பட்டது.  

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள்  பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு  நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும்  அதனை அகற்ற  எவ்வித  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு  வாக்களிப்பு நிலையங்களுக்கு  முன்பாகவே வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தது

அதனை  அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால்  பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அகற்றப்படாமல் இருந்தது.

தொடர்ந்து  இன்றையதினம் காலை  மீண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததன் பின்னர், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரால்  குறித்த  அடையாளங்களை அகற்றியமை குறிப்பிடதக்கது.


முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன் பொறிக்கப்பட்ட சின்னங்களை அகற்றிய பெலிஸார்  முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக காணப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் பொலிஸாரால் இன்று அகற்றப்பட்டது.  வாக்கு சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள்  பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு  நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும்  அதனை அகற்ற  எவ்வித  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு  வாக்களிப்பு நிலையங்களுக்கு  முன்பாகவே வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்ததுஅதனை  அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால்  பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அகற்றப்படாமல் இருந்தது.தொடர்ந்து  இன்றையதினம் காலை  மீண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததன் பின்னர், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரால்  குறித்த  அடையாளங்களை அகற்றியமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement