திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீதியோரத்தில் சடலமாக காணப்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர் நகரில் நடமாடும் யாசகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலதிக விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
திருகோணமலை பிரதான வீதியில் யாசகர் சடலமாக மீட்பு திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் வீதியோரத்தில் சடலமாக காணப்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.உயிரிழந்தவர் நகரில் நடமாடும் யாசகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலதிக விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.