மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய இரு நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நேற்று நீதிமன்றத் தொகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய நான்கு முக்கிய சந்தேக நபர்களையும் ஏப்ரல் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி மற்றும் மயக்க மருந்துகளை விநியோகித்த நபர் உட்படப் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நகைக்கடை உரிமையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பின் கீழ், பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய இரு நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.நேற்று நீதிமன்றத் தொகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய நான்கு முக்கிய சந்தேக நபர்களையும் ஏப்ரல் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி மற்றும் மயக்க மருந்துகளை விநியோகித்த நபர் உட்படப் பலரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களுக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நகைக்கடை உரிமையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பின் கீழ், பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.