• Jan 16 2026

சிவனொளிபாதமலையில் பொலித்தீன் பாவனையை தடை!

dileesiya / Dec 23rd 2025, 4:35 pm
image

சிவனொளிபாதமலையில்  பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். 

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 06 மாதகாலம் நீடிப்பதுடன், குறித்த காலப்பகுதியில் அங்கு வருகை தருகின்ற யாத்திரிகள் மற்றும் ஏனைய நபர்களால் கழிவகற்றப்படும் உக்கலடையும் மற்றும் உக்கலடையாத கழிவுப் பொருட்கள் அப்பிரதேசத்தில் அதிகளவில் சேர்கின்றன. 

சிவனொளிபாதமலை வனப்பிரதேசம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தால் உள்வாங்கப்பட்டுள்ள அதிகூருணர்வு வலய‍மாக இருப்பதுடன், குறித்த பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவம் செய்வது  தேவையாகவுள்ளது. 

அதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் குறித்த பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றாடல் அமைச்சு கீழ்க்காணும் படிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றமையை சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியதுடன், அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.


சிவனொளிபாதமலையில் பொலித்தீன் பாவனையை தடை சிவனொளிபாதமலையில்  பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 06 மாதகாலம் நீடிப்பதுடன், குறித்த காலப்பகுதியில் அங்கு வருகை தருகின்ற யாத்திரிகள் மற்றும் ஏனைய நபர்களால் கழிவகற்றப்படும் உக்கலடையும் மற்றும் உக்கலடையாத கழிவுப் பொருட்கள் அப்பிரதேசத்தில் அதிகளவில் சேர்கின்றன. சிவனொளிபாதமலை வனப்பிரதேசம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தால் உள்வாங்கப்பட்டுள்ள அதிகூருணர்வு வலய‍மாக இருப்பதுடன், குறித்த பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவம் செய்வது  தேவையாகவுள்ளது. அதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் குறித்த பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றாடல் அமைச்சு கீழ்க்காணும் படிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றமையை சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியதுடன், அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement